யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இயந்திரவியல் சிறப்பு இறுதியாண்டு மாணவனான மகேஸ்வரன் றஜிதனால் வயலில் நீர்பாய்ச்சுவதற்கான வாய்க்கால் போடும் எளிய இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.
முழுக்க உள்ளூர் பொருட்களை கொண்டு அமைக்கப்பட்ட இவ்வியத்திரத்தின் மூலம் வேண்டிய படி வாய்க்கால் அமைக்க உதவும்.
கிளிநொச்சி இரத்தினபுரத்தை சேர்ந்த மாணவன் சிறு வயது முதல் கல்வியிலும் ஏனைய இணைபாட விதான செயற்பாடுகளிலும் திறமையான மாணவன் கபொத சாதாரன தரப்பரீட்சையில் கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் தோற்றி 10A சித்தி பெற்று உயர்தரத்தில் உயிரியல் பிரிவை தெரிவு செய்து கிளிநொச்சி மத்திய கல்லூரியில் கற்றான்.
வைத்தியர் ஆக வேண்டும் என்ற கனவோடு கற்ற மாணவனுக்கு போரின் வடுக்கள் அவனை வாட்டியது எறிகணை வீச்சில் தந்தையை இழந்தான் பின்பு குடும்பச்சுமை இவனிடம் வந்தது.
மிகவும் கஷ்டத்தின் மத்தியில் தன் பகுதி நேர வேலைகளுக்கு சென்று தன் படிப்பையும் குடும்பத்தையும் கவனித்து வந்து உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து, எதிர்பார்த்த இலக்கை அடையாது விவசாயபீடத்திற்கு தெரிவாகி கற்றலோடு பகுதிநேர வேலைகளுக்கு சென்று தன்குடும்பத்தையும் கவனித்து தன் கல்வியையும் கவனித்தே இச்சாதனையையும் நிலைநாட்டியுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.