யாழ் . பல்கலைக்கழக விடுதிக்குள் புகுந்த பொலிஸார் மாணவர்களை சுடப்போவதாக எச்சரிக்கை..!!

யாழ் பல்கலைக்கழக விடுதிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த பொலிஸார் மாணவர்களை சுடப்போவதாக அச்சுறுத்தி சென்றுள்ளனர் . இன்று(23)  அதிகாலை 12.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாணவன் ஒருவருக்கு பிறந்தநாள் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் அங்கு வந்த பொலிஸார் இப்படி ஒரு கொண்டாட்டமும் இனி கொண்டாட முடியது எனவும் அப்படி செய்தால் சுடுவோம் எனவும் அச்சுறுத்தி சென்றுள்ளதோடு சில மாணவர்களின் தகவல்களையும் திரட்டி சென்றுள்ளதாக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் தெரிவித்தார்

இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts