யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்துக்கு இரு மாணவ விடுதிகள்

jaffna-universityயாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கு இரு விடுதிகளை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாகவும்,

229 மில்லியன் ரூபா செலவில் இந்த விடுதிகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன், 100 ஆண் மாணவர்களும், 100 பெண் மாணவர்களும் தங்கக் கூடிய வகையில் இரண்டு விடுதிகள் அமைக்கப்படவுள்ளன.

பல்கலைக்கழகத்துக்கு உள்வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில் விடுதி வசதிகளும் அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் இத்திட்டம் 2014 ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts