யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய மாணவர்களுக்கு தடை!

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட வளாகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் உள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரனினால் நேற்று(செவ்வாய்கிழமை) மாலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிடிவதை குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Related Posts