யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கைக்குண்டு மீட்பு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சிவன் ஆலயத்தில் புனரமைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் மதில் கட்டுவதற்காக மண்ணை தோற்றியபோது கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைக்குண்டை மீட்பதற்காக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts