இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய உத்தரவையும்பொருட்படுத்தாமல் யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருந்த பெறுமதியான மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளன.
இந்த மரஅழிப்பை தடுத்து நிறுத்தவேண்டும் என யாழ்.பல்கலைக்கழக சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பலா, தென்னை, வேம்பு ஆகிய மரங்கள் பெரு விருட்சமாக நீண்ட காலமாக ஒரு சோலையாக இந்த பரமேஸ்வரன் ஆலயம் காட்சியளித்தது. இதனை எந்தவித அனுமதியும் இன்றி பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேரசிரியர் சி.க.சிற்றம்பலத்தின் தன்னிச்சையான செயற்பாட்டில் இந்த மரங்கள் மின்சார வாளைப் பயன்படுத்தி துண்டு துண்டாக வெட்டப்படுகிறது.
இச்செயற்பாடு கடந்த மூன்று நாட்களாக இடம்பெறுகிறது.
இயற்கை வளங்களை அழிக்க துணைபோகும் அரச அதிகாரிகள் மீது தராதரம் பார்க்காமல்நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய சுற்றாடல் வாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எனவே இந்த மரங்கள் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் யாழ் பல்கலைக்கழக சமூகம் கேட்டுக்கொண்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட அரச அதிபர், மற்றும்ஜனாதிபதி ஆகியோருக்கு யாழ் பல்கலைக்கழக சமூகத்தினால் கடிதம் ஒன்றும்அனுப்பப்பட்டுள்ளது.