யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் நாடகத்திற்கு திடீர் தடை!தடையினையினை மீறி அரங்கேற்றம்

jaffna-universityயாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் தயாரிக்கப்பட்ட ‘எங்கள் கதைகள்’ என்ற நாடகத்தினை பல்கலையில் அரங்கேற்ற தடை விதிக்கப்பட்டது.

குறித்த நாடகம் தொடர்பாக பல்கலை நிர்வாகத்தின் அனுமதி பெற்று இன்று யாழ்.பல்கலை வளாகத்தில் முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமாகும் என இருந்த நிலையிலேயே திடீரென இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த நாடகத்தில் அரசியல்,தனிப்பட்டவர்களை குத்திக் காட்டுவதாக அமைவதால் இதனைத் தடை செய்வதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக நாடகக் குழுவிடம் கேட்ட போது குறித்த நாடகம் தங்களுடைய கதைகளை சொல்வனவாகவே உள்ளது இது எந்த அரசியல் சம்பந்தமாகவோ அல்லது யாரையும் குத்திக் காட்டுவதாக அமையவில்லை.

பள்ளி தொடக்கம் பல்கலை வரை எம்மைப் போன்ற மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் சமூக பிரச்சனைகளை வெளிக்கொண்டு வருவதாகவே அமைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை பிந்திக்கிடைத்த தகவல்களின்படி தடையினையினை மீறி மதியம் பல்கலைபக்கழக முன்றலில் உள்ள மரத்தின் கீழ் நாடகம் மாணவர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளது

Related Posts