யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கேப்பாபிலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணயிளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டமானது, சுமார் 1 மணித்தியாலயங்களுக்கு மேலாக நீடித்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கடந்த 20 நாட்களுக்கு மேலாக தமது காணிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு ​கோரி போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் காணிகளை கையளிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

காணிகளை மீள் வழங்க கோரும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி பல்கலைக்கழக மாணவர்களால் துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.

Related Posts