யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்; தா. பாண்டியன் கோரிக்கை

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையிலுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 20க்கு மேற்பட்டவர்கள் மிகவும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன் நான்கு மாணவர்கள் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டுள்ளார்கள்.

முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின்னர், மனித உரிமை மீறல்கள் மிகவும் கூடுதலாகியுள்ளது என்பதை மனித உரிமை அமைப்புகள் அனைத்தும் மிகவும் கடுமையாக கண்டனம் தெரிவித்து வரும் இன்றைய சூழலில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இச் செயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு, இந்த செயலை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத சட்டத்தில் மாணவர்கள் கைது செய்யபட்டிருப்பதையும், மாணவர்கள் மீதான தாக்குதலையும், இலங்கையின் அமைந்தள்ள பல்கலைக்கழக மாணவர் சங்கம், கண்டியிலுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் என்பன எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இன்நிலையில் பயங்கரவாத சட்டத்தில் கைது செய்யபட்டுள்ள யாழ் பல்கலைகழக மாணவர் சங்க செயலாளர் ப.தர்சானந்த், சொலமன், ஜெனமேஜெயன், சுதர்சன் ஆகிய நால்வரையும் உடன் விடுதலை செய்ய வேண்டும் என அவர் விடுத்த அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Posts