யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் விடுதலை; ஏனையவர்கள் எப்போது?

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சிறீலங்கா பயங்கரவாத தடுப்பு பொலீசாரினால் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி சுதர்சன் என்பவரே விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களில் ஒரு மாணவர் மட்டுமே விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனைய மூன்று மாணவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இன்நிலையில் இன்றைய தினம் யாழ் இராணுவ கட்டளைத் தளபதிக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்று வருவதாக தெரியவருகிறது.

Related Posts