யாழ். பல்கலைக்கழக பரமேஸ்வரன் ஆலய மகாகும்பாபிஷேகம்!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலுள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரப் பெருமானின் புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்றது.

இன்று காலை யாக பூஜையைத் தொடர்ந்து மகாபூர்ணாகுதி, தீபாராதனை, விசேஷ பூஜை என்பன இடம்பெற்று, வேத ஸ்தோத்திர, திருமுறை, நிருத்திய கீத வாத்ய உபசாரங்களுடன் கும்பங்கள் புறப்பட்டு வீதிப்பிரதட்சிணமாக வந்து காலை 6.00 மணிமுதல் 6.45 மணி வரையான மிதுன லக்ன சுபமுகூர்த்த வேளையில் ஸ்தூபி அபிஷேகம், ராஜகோபுர கும்பாபிஷேகம், அனைத்து மூர்த்திகளுக்குமான மகாகும்பாபிஷேகமும் இடம்பெற்றது.

Related Posts