யாழ் பல்கலைக்கழக பதிவாளரின் முக்கிய அறிவித்தல்!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த முகாமைத்துவ மற்றும் வணிகபீட புதுமுக மாணவர்களுக்கான கல்விச்செயற்பாடுகள் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக பதிவாளர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

மேற்படி கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விடுதி வசதிகள் வழங்கப்பட்டிருந்த மாணவர்களுக்கும் புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts