யாழ்.பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம் : 8 மாணவர்களுக்கு இடைக்காலத் தடை

யாழ் பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம் தொடர்பில் எட்டுப் பேருக்கு சந்தேகத்தின் மாணவர்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வளாகத்தில் கல்வி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான தடையினை இன்று பத்தாம் திகதி முதல் விதித்துள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்கலைக்கழக மாணவர்களால் மாணவியர்களிற்கு பாலியல் ரீதியில் துன்புறுத்தல்கள் இடம்பெறுவதாக தெரிவித்து விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு குறித்த மாணவர்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Posts