யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக தமக்கு ஒன்றும் தெரியாது என யாழ் பொலீஸ் நிலையத்தின் புதிய சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். எம் ஜிவ்ரி தெரிவித்தார்.
இன்றைய தினம் யாழ் பொலீஸ் நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
யாழ் பல்கலைக்கழக சம்பவங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் தெரிவித்தார்
மேலும் தெரிவித்ததாவது தாம் கடந்த வாரமே பதவியினை ஏற்றுக் கொண்டதாகவும் பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது,தான் பதவியேற்றதை அடுத்து பல்கலைக்கழக சூழலினை பார்க்கும் போது பொலீசார் கடமையில் ஈடுபட்டுள்ளனர் அமைதியான சூழ்நிலையை பல்கலை வளாகத்தில் ஏற்ப்படுத்தி கொள்வதற்கும் அரச சொத்துக்களை பாதுக்காப்பதற்கும் பொலீசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுகின்றனர் என தெரிவித்தார்.
அதேவேளை கடந்த 28 ம் திகதி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவத்தின் போது இராணுவத்தினர் நுழைந்தமை குறித்தும் சம்பவ இடத்திற்கு அவர்களது வருகை குறித்து தமக்கு எதுவும் தெரியாது என பல்கலைக்கழக சம்பவத்தின் போது கடமையில் ஈடுபட்டிருந்த பொலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இராணுவத்தினர் பல்கலை வளாகத்திற்கு சம்பவ தினத்தன்று எதற்காக வருகை தந்தார்கள் என கேட்பதற்கு அதிகாரம் இல்லை எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.