யாழ். பல்கலைக்கழக கால்பந்தாட்ட அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது

நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டியில் யாழ். பல்கலைக்கழக அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

uni-foot-ball-team

இலங்கை பல்கலைக்கழகங்களுக்கிடையிலான 12 ஆவது கால்பந்தாட்டத் தொடர் வயம்ப பல்கலைக்கழக மைதானத்தில் இம் மாதம் முதலாம் திகதி தொடக்கம் நேற்று முன்தினம் 12 ஆம் திகதி வரை இடம்பெற்றது.

இத் தொடரின் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் வயம்ப பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.

இறுதிப் போட்டியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அணி, ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக அணியை எதிர்த்தாடியது.

மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இப் போட்டியில் இரு அணிகளும் ஒன்றையொன்று விட்டுக்கொடுக்காத வகையில் பந்துப்பரிமாற்றங்களை மேற்கொண்டன.

இறுதியில் யாழ்.பல்கலைக்கழக அணி ஒரு கோலைப்போட்டு 1-0 என போட்டியில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

Related Posts