யாழ்.பல்கலைக்கழக ஊழியர்களின் போராட்டம் இடை நிறுத்தம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுத்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த இந்த போராட்டம் ஊழியர்களுக்கு இடையே இருந்த சம்பள முரண்பாடுகள் மற்றும் பரீட்சை கொடுப்பனவில் பாரபட்சம் மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், தங்களது தவறுகளை ஏற்றுக்கொண்டு தவறுகளை திருத்தி செயற்படுத்த இரு மாத கால அவகாசம் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் பின்னர் ஒரு மாத கால அவகாசம் தர முடியும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தமைக்கு இணங்க குறித்த போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Related Posts