யாழ் பல்கலைக்கழக அணிக்கு வெள்ளி பதக்கம்

பல்லைக்கழகங்களுக்கிடையில் தேசிய ரீதியில் நடைபெற்ற வலைப்பந்தாட்ட தொடரில் பெண்கள் பிரிவில் யாழ் பல்கலைக்கழக அணி வெள்ளிப்பதக்கத்தினை பெற்றுள்ளது.

சப்ரகமுவ மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இறுதிப்போட்டித்தொடரில் யாழ் பல்கலைக்கழக அணியுடன் ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக் கழக அணி போட்டியிட்டது.

இந்த போட்டியில் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக அணி வெற்றிபெற்றது. இந்த போட்டியில் யாழ் பல்கலைக்கழக அணி இரண்டாம் இடத்தினை பெற்று வெள்ளிப்பதக்கத்தினை பெற்றுக்கொண்டது.

Related Posts