யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது கடுமையான அரசியல் மயப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.
வரவு-செலவு திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றம் போதே விஜயகலா இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் வட கிழக்கு கல்வி அபிவிருத்தி பணிகளில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் திருப்தியளிப்பதாக இல்லையென தெரிவித்தார்.
இதேவேளை வடகிழக்கு மாகாணங்களின் கல்வியை மேம்படுத்த, அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் மாறாக யாழ் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களை உள்வாங்கும் வீதம் அதிகரித்துச் செல்வதாகவும் தெரிவித்தார்.