யாழ். பல்கலைக்கழகத்துக்கு திடீர் விடுமுறை!

Jaffna-University1யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் அனைத்தும் எந்தவித காரணங்களும் இல்லாது நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 16ம் திகதி முதல் 21 ம் திகதி வரை பல்கலைக் கழக செயற்பாடுகள் அனைத்தும் இடம்பெறமாட்டாது என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

அத்துடன் குறித்த திகதிக்கு முன்னதாக பல்கலை விடுதியில் தங்கி இருக்கும் மாணவர்களும் வெளியேற்றப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் தினம் மே மாதம் 18 ம் திகதி தமிழர்கள் மத்தியில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமையால் யாழ்.பல்கலையிலும் நினைவுகூறலாம் என்ற காரணத்தினால் இவ்வாறான விடுமுறை அறிவிக்கபபட்டிருக்கலாம் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறே கடந்த மாவீரர் தினத்திலும் காலவரையறையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts