யாழ் பல்கலைக்கழகத்தில் FaceBook மற்றும் Youtube சேவைகள் தடை!

யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ளக வலைப்பின்னல் ஊடான இணைய இணைப்பில் FaceBook மற்றும் Youtube சேவைகள் தடைசெய்யப்பட்டுள்ளது.ஆரம்பத்தில் Youtube மாத்திரம் தடைசெய்யப்பட்டிருந்தது. இருப்பினும் FaceBook இன்று முதல் தடைசெய்யப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக FaceBook மூலமான அநாமதேய பிரச்சாரங்கள் நிர்வகத்திற்கு எதிராக முடக்கிவிடப்பட்டிருந்ததன் பின்னணியில் இந்த தடை வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.இதன்காரணமாக பல்கலைக்கழகத்தில் வேலைத்திறன் அதிகரிக்கும் எனவும் நிர்வாகத்திற்கெதிரான இணையத்தின் ஊடான பிரச்சாரங்களில் பின்னடைவு ஏற்படும் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேற்படி சேவைகளை பலநாட்டு அரசாங்கங்கள் தமது அரச நிறுவனங்களில் தடைசெய்திருக்கின்றன. சில நாடுகளில் முற்றாகவே தடைசெய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

யாழ் பல்கலைக்கழகத்தினை தொடர்ந்து இத்தடை பல அரச தனியார் நிறுவனங்களிலும் நடைமுறைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts