யாழ். பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்!!

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நேற்று பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள்,பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.

இதேவேளை நினைவேந்தலில் கலந்துகொண்டவர்களுக்கு மாணவர்களால் மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

Related Posts