யாழ் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைக்கு முன்பாக உள்ள மரத்தின்கீழ் மாணவர்கள் மதுக்கோப்பைகளை வைத்து மது அருந்தி மது போதையில் உளறிகொண்டிருப்பதாகவும் இதனால் இவ்வழியால் செல்லும் விரிவுரையாளர்களும் மாணவர்களும் சங்கடத்திற்குள்ளாவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் அரங்கேறிவருவதாகவும் இன்று்(25) இது குறித்து விரிவுரையாளர்களால் மார்சல் அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டபோதும் நீண்டநேரமாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையில் விரிவுரையாளர்களும் அலுவலர்களும் கூடியதை அடுத்து போதையில் உழன்ற மாணவர்கள் அவ்விடத்ததைவிட்டு அகன்றதாகவும் பல்கலைக்கழக செய்திகள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழகத்திற்குள் மாணவர்கள் மது அருந்துவதன் காரணமாக தினமும் வெற்று தகரகொள்கலன்களை காணநேரிடுவதாக சுத்திகரிப்பு பணியாளர்கள் சிலர் தெரிவித்தனர். இதேவேளை காதல் ஜோடிகளது தொல்லையும் இந்த மரங்களின் கீழ் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக அவதானித்த விரிவுரையாளர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
இதற்கு முன்னர் நடைபெற்ற இவ்வாறான சம்பவங்களில் விரிவுரையாளர்களை போதையில் தாக்க முயற்சித்த சம்பவங்கள் இடம்பெற்றிருந்த போதிலும் சரியான தண்டனை வழங்கப்படாமையே இந்த நிலைமை தொடர்வதற்கு காரணம் என்றும்
அரசியல் உரிமைகளுக்காகவும் மாணவர் உரிமைகளுக்காவும் போராடும் மாணவர் மன்றங்களும் விரிவுரையாளர் சங்கங்களும் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து நற்பண்புள்ள மாணவர்களை உருவாக்கவேண்டிய பல்கலைக்கழகத்திற்கு களங்கம் ஏற்படாவண்ணம் பார்த்துக்கொள்ளவேண்டும் என விரிவுரையாளர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.