யாழ். பல்கலைக்கழகத்தில் அஞ்சலி

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் எட்டாவது ஆண்டு நினைவு நிகழ்வு, யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் கல்விசாரா ஊழியர்கள் என பலரும் பங்குகொண்டு, சுடரேற்றி, போரில் உயிரிழந்த ஆன்மாக்களை நினைவு கூர்ந்ததுடன் மூன்று நிமிட அக வணக்கமும் செலுத்தினர்.

Related Posts