யாழ் பல்கலைக்கழகத்தில்கதவடைப்புப் போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் சகல நடவடிக்கைகளையும் முடக்கும் வகையில் பல்கலைக்கழகத்தின் அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டு போராட்டம் முன்னெடுக்கபடுகின்றது.

யாழ்.பல்கலைகழகம் முன்பாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிட்ட பல்கலைகழக சமூகத்தினர் பல்கலை கழக வாயில்களை மூடி கொட்டும் மழைக்கு மத்தியில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

சிறைச்சாலைகளில் பல வருடங்களாக எந்த விதமான விசாரணையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உடன் விடுதலை செய்யப்படல் வேண்டும், உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் நியாய பூர்வமான கோரிக்கைகளை செவிசாய்த்து உடன் தீர்வு காணப்படல் வேண்டும்.

சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் அவல நிலை உணர்ந்து பொறுப்புக் கூற வேண்டிய தமிழ் அரசியல் தலைமைகள், அசமந்தப் போக்கினைக் கைவிட்டு உரிய தரப்பிடம் அழுத்தங்கைப் பிரயோகித்து கைதிகளின் விடுதலை விடயத்தில் பொறுப்புக் கூறல் வேண்டும்.ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக் கழக சமூகத்தினால் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related Posts