யாழ். பல்கலைக்கழகத்திலும் கரும்புலிகள் தினம் அனுஷ்டிப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் தினம் யாழ். பல்கலைக்கழகத்திலும் நேற்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.

பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவிடத்தில் நேற்று மாலை 06:05 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஜீலை-5 கரும்புலிகள் தினமான நேற்று யாழ். குடாநாட்டின் முக்கிய இடங்களில் கரும்புலி நாள் நினைவு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

அந்த வகையில் நெல்லியடி மில்லரின் நினைவு திடலிலும் மற்றும் வல்வெட்டித்துறையில் சங்கரின் நினைவுத் திடலிலும் இந்த அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

Related Posts