யாழ். பல்கலைக்கழகத்திற்கு தகுதிவாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் கந்தசாமி கதிர்காமநாதன் நியமனம்

யாழ். பல்கலைக்கழகத்திற்கு தகுதிவாய்ந்த அதிகாரியாக (Competent Authority) வாழ்நாள் பேராசிரியர் கந்தசாமி கதிர்காமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.புதிய துணைவேந்தர் தெரிவுசெய்யப்படும் வரை இவரது நியமனம் செயலில் இருக்கும்.துணைவேந்தர்கள் நீக்கப்படும் சந்தர்ப்பங்களில் இவ்வாறான நியமனம் வழங்கப்படுவது வழமை.  இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சின் செயலாளர் M.M.P.K. மாயாதுன்னே தெரிவித்துள்ளார். இதற்கான வர்த்தமானியில் உயர்கல்வி அமைச்சர் கையொப்பமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இவர் யாழ். பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற சிரேஸ்ர விரிவுரையாளராவார்.

முன்னதாக நேற்று(5) பல்கலைக்கழக துணைவேந்தர் இ.விக்கினேஸ்வரன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் பதவிநீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts