யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலை, விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவ பீடங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் தற்போது தோன்றியுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விடுதியில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களும் இன்று மாலை 4.00 மணிக்கு முன்னதாக விடுதிகளில் இருந்து வௌியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ள கைதிகளின் வழக்குகளை வவுனியா நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு கோரியும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

நேற்று முன்தினம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள் நேற்றும் கடும் மழைக்கு மத்தியில் இரண்டாவது நாளாகவும´ போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக நடவடிக்கைகளை முடக்கி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையிலேயே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கும், பீடாதிபதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் படி பல்கலைக்கழக கல்வி செயற்பாடுகள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts