யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் கடமைகளை பொறுப்பேற்பு

யாழ். பல்கலைக்கழகத்தின் எட்டாவது துணைவேந்தராக, விஞ்ஞான பீட பீடாதிபதி பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் தமது கடமைகளை போறுப்பேற்றுக்கொண்டார்.

இது தொடர்பாக நேற்று பல்கலைக்கழக வளாகத்திலுள்ள ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளையடுத்து புதிய துணைவேந்தர் உத்தியோகப்பூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் விக்னேஸ்வரன், ஜனாதிபதியால் கடந்த வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts