யாழ் பல்கலைக்கழகத்தின் 31 ஆவது பட்டமளிப்பு விழா!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 31 ஆவது பொதுப் பட்டமளிப்புவிழா நேற்றயதினம் (19) ஆரம்பமாகியது.

31st general convocation - 1

யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நேற்றும் (19) இன்றும் (20) ஆக எட்டு அமர்வுகளாக இடம்பெறவுள்ள இப்பட்டமளிப்பு விழாவில் 1939 மாணவர்கள் பட்டம்பெறவுள்ளனர்.

யாழ் பல்கலைகழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் நடைபெற்ற நேற்றய முதல் நாள் அமர்வில் யாழ் பல்கலைக்கழக வேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் சி.பத்தமநாதன், பட்டதாரிகளுக்கான பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.

இதன்போது விரிவுரையாளர்கள், பட்டதாரிகள், மற்றும் அவர்களது பெற்றோர்கள் விசேட கலாசார அணிவகுப்புடன் அரங்கிற்கு அழைத்துவரப்பட்டு பட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நேற்றய முதல்நாள் அமர்வுகளில் 760 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் இன்று இரண்டாம் நாள் அமர்வுகளில் 1179 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

இதில் டிப்ளோமாப் பட்டம் பெறும் 114 மாணவர்களது பட்டங்களும் வெளிவாரியாகப் பட்டம் பெறும் 247 மாணவர்களது பட்டங்களும் அவர்கள் சமுகமளிக்காத நிலையில் பட்டமளிப்பு விழாவில் வேந்தரால் உறுதி செய்யப்பட்டு பிரகடனப்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

31st general convocation - 2

Related Posts