யாழ்ப்பாணப் பல்கலைக் கழத்தின் 30 ஆவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 10,11 ஆம் திகதிகளில் பல்கலைக் கழகத்தில் நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு இன்று காலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போதே துணைவேந்தர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதாவது பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா வருடா வருடம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அதே போன்று இம் முறையும் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது.
பல்கலைக்கழகத்தல் கல்வி கற்று வெளியேறிய மாணவர்கள் 1372 பேருக்கு இம் முறை பட்டங்கள் வழங்கப்படவுள்ளது. இரண்டு நாட்களும் எட்டு அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்த பட்டமளிப்பு விழாவின் போது வருகை தருகின்றவர்கள் நிகழ்விற்கு தடைகளை ஏற்படுத்தாத வகையில் செயற்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.