யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அனைத்துலக சைவ மாநாடு எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
மெய்ப்பொருள் காண்பது அறிவு எனும் மகுட வாசகத்தை கருப்பொருளாகக் கொண்டு விளங்கும் யாழ் பல்கலைக்கழகத்தின் முதலாவது அனைத்துலக சைவமாநாடே எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.
இந்து நாகரீகத்துறையினரின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இம்மாநாடு 12 ஆம் திகதி ஆரம்பித்து 13, 14 ஆம் திகதிகளிலும் நடைபெறும்.
சிவாகமங்களும் திருமுறைகளும் பலப்படுத்தும் சைவப் பண்பாட்டுக் கூறுகளும் சமூகச் நல்லிணக்க சிந்தனைகளும் என்பதே இம் மாநாட்டின் கருப்பொருளாகும்.