யாழ்.பல்கலைகழக களஞ்சியத்திலிருந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மாயம்!! விசாரணை நடக்கிறது!! – துணைவேந்தர்

யாழ்.பல்கலைக்கழக களஞ்சியத்திலிருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கட்டட உபகரணங்கள் காணாமல்போனமை தொடர்பில் முறையான விசாரணை இடம்பெறுகிறது என பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா தெரிவித்தார்.

யாழ்.பல்கலைக்கழக களஞ்சியத்தில் இருந்த பொருட்கள் காணாமல்போன சம்பவம் தொடர்பில் அவ்வாறான நடவடிக்கைகள் இடம் பெறுகிறது என அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல்கலைக்கழக வளாகத்துக்குள் இருந்த களஞ்சியம் ஒன்றில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் காணாமல் போனமை தொடர்பில் அலட்சியமாக இருக்க முடியாது. களஞ்சியத்துக்கு பொறுப்பானவர்கள் அவர்களுடன் சம்பந்தப்பட்டவர்களிடம் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

பொருட்கள் காணாமல்போனமை தொடர்பில் பல்கலைக்கழக போரவைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே பல்கலைக்கழக துனைவேந்தர் என்ற ரீதியில் நானும் பொறுப்புள்ளவன் என்ற நீதியில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் இழந்த பொருளையோ அல்லது பணத்தையோ மீளப் பெறுவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts