யாழ் பண்பாட்டுப்பெருவிழா

யாழ் பண்பாட்டுப்பெருவிழா சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் எதிர்வரும் 8 ஆம் திகதி காலை 9 மணிமுதல் நடைபெறவுள்ளது.

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ் மாவட்ட கலை கலாசாரப் பேரவையும், யாழ் மாவட்ட செயலகமும் இணைந்து இதனை நடத்துகின்றன.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் கலை நிகழ்வுகள், யாழ் முத்து மலர் வெளியீடு மற்றும் மூத்த கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தம்பிராசா குருகுலராசர் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts