யாழ்ப்பாணத்திலிருந்து பண்டாரவளைக்குப் பயணித்த தனியார் பஸ் தீவிபத்துக்குள்ளாகியதில் 19 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 12 பேர் இராணுவத்தினர் என்று தெரிவிக்கப்பட்டது.
தியதலாவ, கஹகொல்ல என்ற இடத்தில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
“பஸ்ஸில் திடீரென ஏற்பட்ட தீயால் விபத்து இடம்பெற்றது. அதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. படுகாயமடைந்த அனைவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்” என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.