Ad Widget

யாழ் நீதிமன்ற தாக்குதல் – 26 பேருக்கு தொடர்ந்து விளக்கமறியல்

யாழ்.நீதிமன்ற கட்டிட தொகுதி மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 4வது பிரிவினரில் 26 பேரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் க.கேசவன் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 08 பேர் 5 லட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், ஏனைய 26 பேரையும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மே மாதம் புங்குடுதீவு மாணவியின் படுகொலைக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் யாழ். நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலவரத்தின் போது, 130 நபர்கள் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

மேற்படி நபர்களுக்கு எதிராக 4 பிரிவாக தொடுக்கப்பட்ட வழக்கில் ஏனைய 3 பிரிவினரும் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் 4வது பிரிவினர் மட்டும் வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

Related Posts