யாழ் நல்லூர் வீதியில் தோன்றியுள்ள ஆபத்து; பலர் விழுந்து படுகாயமடைந்த சோகம்!

யாழ்.மாநகர சபைக்கு முன்பாக வீதியில் வாகனங்களில் செல்வோர் மிக அவதானமாக செல்லவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு யாழ்.மாநகர சபையிலிருந்து வேறு ஒரு இடத்திற்கு பீப்பாயில் நிரப்பிய ஓயில் டிராக்டர் மூலம் எடுத்து சென்றபோது அதில் இருந்து சரிந்து வீதியில் சிந்தப்பட்டுள்ளது.

இதையடுத்து மாநகர சபை ஊழியர்கள் வீதியில் மணல் நிரப்பியிருந்தனர். ஆனாலும் மணல் போட்டும் ஓயில் வழுக்கியமையால் நேற்றும் அவ்வீதியில் உந்துருளி ஈருருளி போன்றவற்றில் பயணத்தவர்கள் வழுக்கி விழுந்துள்ளனர்.

இன்று திங்கட்கிழமை நல்லூர் ஆலயத்திற்கு காளாஞ்சி கொடுக்கும் வைபவத்திற்காக காலை மாநகர சபையால் வீதிக்கு நீர் தெளிக்கப்பட்டது.

இதனால் ஓயில் படலம் வீதியில் காய்ந்தநிலையில் காணப்பட்டாலும் நீர் ஊற்றப்பட்டதால் வீதியிலிருந்த மணல் கழுவப்பட்டுள்ளது. இதன்காரணமாக அவ்வீதியில் உந்துருளியில் சென்ற இருவர் வழுக்கி விழுந்து படுகாயமடைந்துள்ளனர்.

இதில் குழுந்தையை ஏற்றிச்சென்ற தாயும் மற்றும் ஒருவரும் விழுந்து சிறு காயமடைந்துள்ளனர். இதையடுத்து மாநகர பணியாளர்கள் வீதியால் செல்பவர்களை மெதுவாக செல்லுமாறு கூறியதுடன் பின்னர் வீதிக்கு மணல் போடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் சிறிய நேரம் மழை பெய்தாலே மீண்டும் ஓயில் வழுக்கும் நிலையே ஏற்படும். எனவே உடனடியாக மாநகர சபை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வீதியில் உள்ள ஓயில் படிமத்தை அகற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Posts