யாழ். நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் ஆரம்பமாகியது இந்து ஆராய்ச்சி மாநாடு

அகில இலங்கை இந்து மன்றத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் இந்து ஆராய்ச்சி மாநாடு நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் நேற்று ஆரம்பமாகியது.

இந் நிகழ்வில் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், நல்லை ஆதீன முதல்வர், இந்தியாவின் தர்மபுரி ஆதீன குருமுதல்வர் ஸ்ரீமத் மௌனகுமார தம்பிரான் சுவாமிகள் மற்றும் யாழ் பல்கலைக்கழக இந்து நாகரீக பேராசிரியர் கோபால கிறிஸ்ண ஐயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், குறித்த மாநாட்டில் இந்து ஒளி வெளியீட்டு இதழ் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இதேவேளை குறித்த மாநாடு 3 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளதுடன் ஈழத்து இந்து மதத்தின் வரலாற்று வளர்ச்சிப் போக்கு எனும் தொனிப் பொருளிலே இம் மாநாடு இடம்பெற்று வருகிறது.

இந்நிகழ்வில் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை

இந்நிகழ்வில் நல்லை ஆதீன முதல்வர் ஆற்றிய உரை

Related Posts