யாழ்.நல்­லூ­ரி­லி­ருந்து சிவ­னொ­ளி­பா­த­ம­லைக்­குச் சென்ற பாத­யாத்­தி­ரைக் குழு­வுக்கு பொலி­ஸா­ரால் இடை­யூறு!

நல்­லூ­ரி­லி­ருந்து சிவ­னொ­ளி­பா­த­ம­லைக்கு யாத்­திரை சென்ற பக்­தர்­க­ளுக்­குப் பொலி­ஸா­ரால் இடை­யூறு ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கக் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பில் கண்­ட­னம் தெரி­வித்­தும் உரிய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கோரி­யும் அரச தலை­வர், தலைமை அமைச்­சர் உள்­ளிட்ட12 தரப்­பி­ன­ருக்கு இந்து சம­யத் தொண்­டர் சபை கடி­தம் அனுப்­பி­யுள்­ளது. அந்­தக் கடி­தத்­தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது:

நல்­லூர் கந்­த­சு­வாமி ஆல­யத்­தி­லி­ருந்து கடந்த ஏப்­ரல் மாதம் 20 ஆம் திகதி 45 சிவ­ன­டி­யார்­கள் சிவ­னொ­ளி­பாத மலை நோக்கி மாலை 6 மணிக்கு சின்­ம­யா­மி­ஷன் சுவா­மி­க­ளு­டன் பாத­யாத்­திரை ஆரம்­பித்­தது.

இலங்கை மலை­யக இந்து குரு­மார் ஒன்­றிய பொதுச் செய­லா­ளர் சிவஸ்ரீ வேலு சுரேஸ்­வ­ரக்­கு­ருக்­க­ளின் ஒழுங்­க­மைப்­புக்கு அமைய ஏப்­ரல் மாதம் 22ஆம் திகதி அதி­காலை.3.30 மணிக்கு சிவ­னொ­ளி­பாத மலை­யில் சிவ­னின் பாதம் தரி­சிக்க ஓம் நம­சி­வாய என்ற மந்­தி­ரம் முழங்க அரோ­கரா என்ற அருள் முழக்­கத்­து­டன் சிவ­னின் ஊர்தி நந்­தி­யெம் பெரு­மா­னின் உரு­வம் பொறித்த கொடியை ஏந்­தி­ய­வாறு யாத்­திரை ஆரம்­பிக்­கப்­பட்­டது.

இடை­யி­டையே ஓம் நம­சி­வாய சொல்­வ­தற்­கும் நந்­திக் கொடி ஏந்­திச் செல்­வ­தற்­கும் ஒரு சில­ரால் இடை­ யூ­று­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன. அதைக் கருத்­தில் கொள்­ளாது சிவ­சிந்­தை­யு­டன் யாத்­தி­ரையை பக்­தர்­கள் தொடர்ந்­த­னர்.

சிவ­னொ­ளி­பாத மலையை அடைந்­த­தும் காலை 8.30 தொடக்­கம் 9.30 மணிக்­கு­மி­டை­யில் அங்கு கட­மை­யில் இருந்த பொலி­ஸா­ரும் ஒரு மத­கு­ரு­வும் யாத்­தி­ரைக்­குச் சென்­ற­வர்­களை அழைத்து இங்கு ஓம் நம­சி­வாய சொல்­லக்­கூ­டாது, நந்­திக்­கொடி பிடிக்க்­க­கூ­டாது உடனே சுருக்­குங்­கள் என்­றும் நந்­திக் கொடி­யு­டன் எடுத்த படத்தை கைத்­தொ­லை­பே­சி­யில் இருந்து உடனே அழிக்­கு­மா­றும் கட்­ட­ளை­யிட்டு அழிப்­பித்­தார்­கள்.

யாத்­தி­ரைக்­குச் சென்­ற­வர்­க­ளின் வேட்­கை­கள் நிறைவு செய்­யப்­ப­ட­வில்லை. முன்­னோர்­கள் பல்­லா­யி­ரம் ஆண்­டு­க­ளுக்கு முன்பு பின்­பற்­றிய வழி­களை யாத்­தி­ரைக்­குச் சென்­ற­வர்­கள் பின்­பற்ற விரும்­பு­கின்­ற­னர்.

சம­யம் சார்ந்த அமைச்­சுக்­கள் குரு­மார்­க­ளுக்­கும் இந்த விட­யத்தை தெரி­யப்­ப­டுத்­து­கின்­றோம். உரி நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கோரு­கி­றோம் என்று இந்து சம­யத் தொண்­டர் சபை தெரி­வித்­தது.

Related Posts