யாழ். நலன்புரி நிலைய மக்களுக்கு உலருணவு வழங்க வேண்டும்

யாழ். மாவட்டத்தில் 7 பிரதேச செயலகங்களில் 1318 குடும்பங்களைச் சேர்ந்த 4,737 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர்.

இம்மக்கள் பல வருடங்களாக தங்களது சொந்த இடங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்த நிலையில் வாழ்ந்து வருவதால் இவர்களுக்கான உலருணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீள் குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சரிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த நலன்புரி நிலையங்களில் பல வருடங்களாக வசித்துவரும் மக்கள் வலிகாமம் வடக்கு பகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள். கடற்றொழில் மற்றும் விவசாய செய்கைகளில் ஈடுபட்டுவந்த இம்மக்கள், இன்றைய சூழலில் வாழ்வாதாரங்களை மேற்கொள்ள வழியில்லாது பல்வேறு துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

எனவே, யாழ். மாவட்டத்தில் நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களுக்கு அவர்கள் மீள் குடியேற்றம் செய்யப்படும் வரை உலருணவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Posts