யாழ். நகர சந்தைக்கட்டடத்தை விரைவாக அமைக்க வேண்டும் : வணிகர் கழகம் கோரிக்கை

1982 ஆம் ஆண்டு எரிக்கபட்ட யாழ் .நகர சந்தைக் கட்டடம், மீள அமைக்கப்படுவதை வரவேற்பதோடு, அதனை விரைவாக அமைத்துத் தர வேண்டும் என யாழ் வணிகர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

1982ஆம் ஆண்டு யாழ்ப்பாண பொதுசன நூலகம் எரிக்கப்பட்ட தினத்தில், மிகப் பழமை வாய்ந்ததும் யாழ்ப்பாண சரித்திரத்தில் அடையாளச் சின்னமாக இடம்பெற்ற நகர மத்தியில் அமைந்திருந்த சந்தைக்கட்டடமும் எரிக்கப்பட்டது.

35 ஆண்டுகளின் பின்னர், புதிய கட்டடத்தை அமைப்பதற்கு தற்போது ஒரு பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பழைய கட்டட தொகுதி அமைந்திருந்த இடத்தில் புதிய கட்டடத்தை அமைப்பது என, யாழ். மாவட்டச் செயலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் அதனை விரைவாக அமைத்து தர வேண்டும் என யாழ் வணிகர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related Posts