யாழ்.நகர உணவகத்திற்கு தென்னிலங்கையிலிருந்து 3 நாள்களுக்கு முன் வந்த பணியாளர் திடீர் சாவு!!

யாழ்ப்பாணம் நகரில் கே.கே.எஸ் வீதியில் இயங்கும் உணவகம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தென்னிலங்கையிலிருந்து கடந்த 3 நாள்களுக்கு முன் அவர் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

பணியாளர் நேற்றிரவு திடீரென உயிரிழந்துள்ளார் என்று ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரது சடலத்திலிருந்து மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்ற உணவகம் மூடப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts