யாழ்ப்பாணத்தில் கேஸ் சிலிண்டர்களை திருடிய குற்றச்சாட்டில் நேற்று வியாழக்கிழமை (26) இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 10 கேஸ் சிலிண்டர்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
யாழ். நகர் பகுதி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகள், உணவகங்களில் கேஸ் சிலிண்டர்கள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்த நிலையில், அது தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குருநகர் பகுதியை சேர்ந்த இருவரை கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து 10 சிலிண்டர்களையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இரு நபர்களும், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும், போதைப்பொருளை கொள்வனவு செய்வதற்காகவே சிலிண்டர்களை திருடியுள்ளனர் என விசாரணைகளில் போது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.