யாழ். நகரை அபிவிருத்திசெய்ய அமைச்சரவை ஒப்புதல்!

யாழ்ப்பாணம் நகரை அபிவிருத்தி செய்வதற்காக பெரு நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இணை அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கயந்த கருணாதிலக இவ்வாறு கூறினார்.

“இடம்சார் அமைவிட ரீதியில் சமநிலையான பொருளாதார வாய்ப்புக்களை பரவலடையச் செய்வதற்கும் முழுமையான பொருளாதார வசதியை விரைவுபடுத்துவதற்கும் நாட்டின் வட பகுதியில் உள்ள வறுமையை ஒழிக்கவும் உரிய செயற்பாடாக கொழும்புக்கு அப்பால் இன்னுமொரு பெரிய நகரத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது முறைத்திறனான நகர அபிவிருத்தி செயல்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தச் செயல்திட்டத்தின்படி கொழும்புக்கு அப்பால் உள்ள யாழ்ப்பாணம் நகரத்தை அபிவிருத்தி செய்ய முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது” – என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts