ஆட்கடத்தல்காரர்களின் பொய்களுக்கு ஏமாந்து நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வீணாக்க வேண்டாம் என்ற தலைப்பிலான துண்டுப்பிரசுரங்கள் யாழ் நகரில் வழங்கப்படுகின்றன.
வீசா இல்லாமல் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் பயணிகளை விழிப்பூட்டும் நடவடிக்கையாக இத் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்படுகின்றது.
இதில் வீசா இல்லாமல் படகில் ஏறும் நீங்கள் அவுஸ்ரேலியாவைச் சென்றடைய மாட்டீர்கள் குடும்பத்தினர் சிறுவர்கள் ஆதரவற்ற பிள்ளைகள் கல்வித்தகைமை கொண்டவர்கள் அல்லது விசேட தகதியடையுடையோர் அனைவருக்கம் இச்சட்டம் பொருந்தும்.
நீங்கள் யாராக இருந்தாலும் எங்கிருந்து வந்தாலும் அவுஸ்திரேலியாவில் குடியமர முடியாது. போன்ற வாசகங்களுடன் இவ் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்படுகின்றன. –