யாழ் நகரில் மதுப்பிரியா்கள் ரகளை

Fight Logoயாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதி ஊடாகப் பயணம் செய்த பலர் அங்கு நின்ற இளைஞர்களால் நேற்று கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். சுமார் 20 வயதுக்குக் குறைந்த இளைஞர்களினாலேயே இந்தத் தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. தாக்குதல் மேற் கொண்ட வர்கள் மது போதையில் காணப்பட் டதாக தாக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். நேற்று பிற்பகல் கல்லூரி வீதியால் சென்ற இளைஞன் ஒருவர் தனது சைக்கிளை வீதியோரமாக நிறுத்தியுள்ளனர். இதனை இடைஞ்சல் எனத் தெரிவித்த இளைஞர் கூட்டம் பிரஸ்தாப இளைஞனை தாக்கியதுடன் அவர் பயணித்த சைக்கிளையும், சேதமாக்கியுள்ளனர். அதே போன்று வடி எனக்கூறப்படும் சிறிய ரக வாகனம் ஒன்று அவ்வீதிவழியாகப் பயணித்த நிலையில் நடுவீதியில் நடனமாடிய இளைஞன் ஒருவரை இலேசாக முட்டியுள்ளது.

இதனையடுத்து அங்கு மது போதையில் நின்ற இளைஞர் குழு அவ்வாகனத்தை முற்றுகையிட்டுத் தாக்கத் தொடங்கியது. இதில் வாகனக் கண்ணாடிகள் சேதமடைந் ததுடன் சாரதியும் காயமடைந்த போதிலும் ஒருவாறு அவர்களிடமிருந்து தப்பித்து சென்று விட்டார். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts