யாழ். நகரில் போலி மருத்துவர்கள் கண்டுபிடிப்பு

யாழ். நகரப் பகுதியில் போலி மருத்துவர்கள் மருத்துவம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சி.சிவரூபன் தெரிவித்துள்ளார்.யாழ். நகரில் மருத்துவ கிளினிக் நிலையங்களை நடத்துபர்களில் சிலர் போலி வைத்தியர்கள் எனவும் இவர்கள் மருத்துவம் செய்வது தொடர்பில் தகுந்த ஆதாரங்கள் தமக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் போலி மருத்துவர்களைக் கைதுசெய்வதற்குரிய நடவடிக்கைகள் குறித்து யாழ். பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் ரி.இந்திரனுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் சட்ட வைத்திய அதிகாரி சி.சிவரூபன் குறிப்பிட்டுள்ளார்

யாழ். நகரில் 5 வருடங்களாக இயங்கி வந்த பல் பிடுங்கும் மருத்துவ நிலையத்தில் மக்களுக்கு மருத்துவம் செய்த போலி வைத்தியர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் போலி மருத்துவர் என நிரூபணமாகியுள்ளதாகவும் சட்ட வைத்திய அதிகாரி சி.சிவரூபன் தெரிவித்துள்ளார்.

Related Posts