யாழ். நகரில் த.தே.கூ, வட மாகாண சபை தொடர்பில் அநாமதேய துண்டுப்பிரசுரம்

யாழ். நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு மாகாண சபையை விமர்சித்து அநாமதேய துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

1

4(68)

அவ் துண்டுப்பிரசுரங்களில்

“எங்கள் இனத்தை கொன்று குவித்த மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகாவை
ஜனாதிபதியாக வருவதற்கு ஆதரித்த கூட்டமைப்பிற்கு ஓய்வு நிலை இராணுவ அதிகாரியை மீளவும் ஆளுநராக்கியதை எதிர்க்க என்ன அருகதை இருக்கிறது”

மகபண சபை அரசே!

எம்மவர்க்கு நல்லது செய்ய.. முடியாவிட்டால் மற்றவர்களை குறைகாண்பது ஏன்?
குறைகாண்பதை நிறுத்து முடியாவிட்டால் இராஜினாமா செய்!

எமது மக்கள் தலைவராண அமிர்தலிங்கம் ஐயா அவர்களை படுகொலை செய்த இன்றைய தினம் அவரை படுகொலை செய்த புலிகளை கண்டிப்போம்

தமிழர்களின் உரிமைக்காக போராடிய அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களை படுகொலை செய்த புலிகளை கண்டிக்கின்றோம்

இவ்வாறு அவ் துண்டுப்பிரசுரங்களில் எழுதப்பட்டிருப்பதோடு விமர்சனங்கள் கொண்ட அநாமதேய துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருப்பதடன் அவை கிழிக்கப்பட்டும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts