யாழ்.நகரில் சுகாதார நடைமுறைகளை மீறியதால் திரையரங்குக்கு சீல்!!

சுகாதார நடைமுறைகளை மீறியதாக யாழ்ப்பாணம் நகரில் திரையரங்கு ஒன்று சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள திரையரங்கே இன்று நண்பகல் முதல் சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டது.

நாட்டின் திரையரங்குகளை இருக்கைகளின் எண்ணிக்கையில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதித்து இயங்க அரசு ஒப்புதல் வழங்கியிருந்தது.

எனினும் யாழ்ப்பாணம் நகரில் மூடப்பட்ட திரையரங்கு முழுமையான இருக்கைகளுக்கு பார்வையாளர்களை அனுமதித்து ரிக்கெட்டுக்களை விற்பனை செய்யப்பட்டது.

ரிக்கெட்டுக்களை இணையத்தில் விற்பனை செய்ய அறிவுறுத்தியும் அதனை மீறியமை ஆகிய காரணங்களால் மூடப்பட்டது என்று சுகாதாரத் துறையினரால் கண்டறிப்பட்டது.

அதனாலேயே அந்த திரையரங்கு சுகாதார நடைமுறைகளின் மூடப்பட்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

Related Posts