யாழ். நகரில் கடையொன்று தீக்கிரை! பல லட்சம் ரூபாய் பொருட்கள் நாசம்

72643_381839151914472_1764597771_nயாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள கடை ஒன்று நேற்று தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஸ்ரான்லி வீதியில் மக்கள் வங்கிக்கு அருகாமையில் உள்ள வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை நிலையத்தில் மின் ஒழுக்கு ஏற்பட்டதனால் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பூட்டப்பட்டிருந்த கடை எரிந்து கொண்டிருந்தவேளை புகை வெளிவருவதனை அவதானித்த மக்கள் வங்கியின் காவலாளி உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தினார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் தீயணைப்புப்படையினரின் உதவியுடன் தீயினைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.

எனினும் கடையில் இருந்த பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts