யாழ்.நகரில் ஐஸ்கிறீம் தானப்பந்தல்

யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்பவியல் கல்லூரியின் எந்திரவியல் டிப்ளோமா மாணவர்களால் பொசன் போயாவை முன்னிட்டு ஐஸ்கிறீம் தானப்பந்தல் சேவை யாழ்ப்பாண மாநகரில் நேற்றயதினம் நடத்தப்பட்டது.

எந்திரவியல் டிப்ளோமா சிங்கள மாணவர்களால் நடத்தப்பட்ட இந்த ஐஸ்கிறீம் தானப்பந்தலில் தமிழ் மாணவர்களும் ஒத்துழைப்பை வழங்கினர்.

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் பத்திரிசியார் கல்லூரி வீதி சந்திக்கும் இடத்தில் நேற்று முற்பகல் முதல் இந்த ஐஸ்கிறீம் தானப்பந்தல் நடத்தப்பட்டது.

பௌத்தர்களின் பொசன் போயா தானப்பந்தல் சேவை நாடுமுழுவதும் நேற்றும் இன்றும் முன்னெடுக்கப்படுகின்றன. 4 ஆயிரம் தானப்பந்தல்களுக்கான அனுமதி பெறப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Posts